Homeகுற்றவியல்SRC இண்டர்நேஷனல் நிதி மோசடி தொடர்பான 3 குற்றச்சாட்டுகளிலிருந்து நஜீப் விடுவிக்கப்பட்டார்!

SRC இண்டர்நேஷனல் நிதி மோசடி தொடர்பான 3 குற்றச்சாட்டுகளிலிருந்து நஜீப் விடுவிக்கப்பட்டார்!

கோலாலம்பூர், ஜூன் 20-

SRC இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதி தொடர்பான மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் இன்று விடுதலை இன்றி விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டதாகவும், வழக்கறிஞர் தரப்பு விரைவில் வழக்கைத் தொடங்க தயாராக இல்லாததால், அவ்வழக்கை ரத்து செய்யக்கோரி, டத்தோ ஸ்ரீ நஜீப் செய்திருந்த விண்ணப்பத்திற்கு, கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி K முனியாண்டி அனுமதியளித்தார்.

இவ்வழக்கு, டத்தோ ஸ்ரீ நஜீப் மற்றும் SRC தொடர்பான மற்றொரு வழக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

27 மில்லியன் ரிங்கிட்டில் முறைகேடு புரிந்ததாக, கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி அம்னோ முன்னாள் தலைவருமான டத்தோ ஸ்ரீ நஜீப் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அந்த பணத்தை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர் அவற்றை மறுத்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி, ஜாலான் ராஜா சூலான், ஆம்பாங்க் குழும கட்டிடத்தில் அக்குற்றத்தை புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

spot_img

latest articles

explore more