Homeஅரசியல்பொருளாதார அமைச்சின் பொறுப்புகளை, அமீர் ஹம்சா அசிசான் ஏற்கிறார்!

பொருளாதார அமைச்சின் பொறுப்புகளை, அமீர் ஹம்சா அசிசான் ஏற்கிறார்!

கோலாலம்பூர், ஜூன் 27-

பொருளாதார அமைச்சின் பொறுப்பை, இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் உடனடியாக ஏற்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அம்முடிவு எடுக்கப்பட்டதாக, அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் தெரிவித்தார்.

டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சாவின் முக்கிய பணியாக, 13-வது மலேசிய திட்டத்தின் (RMK13) இறுதி வடிவத்தை தயாரித்து, ஜூலை 31ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார். அமைச்சர்கள் வழங்கிய ருத்துகளை கவனத்தில் கொண்டு அவர் அத்திட்டத்தை மாற்றியமைப்பார்.

இதனிடையே, தன் மீது நம்பிக்கை வைத்து அப்பொறுப்பை வழங்கிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு நன்றி தெரிவித்த அமீர் ஹம்சா, மடானி பொருளாதார இலக்குகளை முன்னெடுக்க RMK13-ஐ மேம்படுத்துவதாக உறுதியளித்தார்.

கடந்த டிசம்பர் 2023-ல் இரண்டாம் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட டத்தோ ஸ்ரீ அமீர், செனட்டராகவும் உள்ளார்.

முன்னதாக, பிகேஆர் துணைத் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி, பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

ஆயினும், பொருளாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவதற்கு முன்பே, 13ஆவது மலேசியத் திட்ட வரைவை முடித்து விட்டதாக, அவர் கூறியிருந்தார்.

spot_img

latest articles

explore more