சிம்மோர், ஜூலை 6-

பேரா , சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பாலர் பள்ளியை நிர்மாணிக்க அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியிருப்பதாக தம்புன் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி டத்தோ ஆர் . சுரேஷ்குமார் தெரிவித்தார்

தம்புன் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டுள்ள இப்பள்ளியின் வளர்ச்சிக்கு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியப்படுகிறது.

இப்பள்ளியில் பாலர் பள்ளியை நிர்மாணிக்க கல்வி இலாகாவின் ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாக சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 38 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டியைத் தொடக்கி வைத்த பின்னர்  செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்தப் பாலர் பள்ளியை நிர்மாணிக்க 3 லட்சம் வெள்ளியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அங்கீகரித்திருப்பதாக அவர் சொன்னார்.

இந்த பாலர் பள்ளி இவ்வாண்டு இறுதிக்குள் நிர்மாணிக்கப்படும் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.

சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பாலர் பள்ளியை நிர்மாணிப்பதன் வழி் எதிர்காலத்தில் அதிகமான மாணவர்கள் இப்பள்ளியில் பயில வாய்ப்பு உள்ளதை சுரேஷ் குுமார் சுட்டிக் காட்டினார்.

இப்பள்ளியில் பாலர் வகுப்பு இல்லாத நிலையை பள்ளி் நிர்வாகம் தம்மிடம் எடுத்துரைத்ததாகவும் இவ்விவகாரத்தை பிரதமரும் தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தாம் கொண்டு சென்றதாகவும் அவர் விவரித்தார்.

இதன் பயனாக இப்பள்ளியில் பாலர் பள்ளியை அமைக்க அரசாங்கத்திடமிருந்து அங்கீகாரம் கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த முயற்சிக்காக  பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் க. டினேஷ்குமார் டத்தோ சுரேஷ் குமாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில்  வர்த்தக பிரமுகர் எஸ். வாசு மற்றும் சுற்றுவட்டார தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்  கலந்து கொண்டனர்.