கோலசிலாங்கூர், ஜூலை 6-
இந்நாட்டில் நாம் வாழ வேண்டுமென்றால், தமிழ்ப்பள்ளிகளும் ஆலயங்களும் மிக முக்கியம். அவையிரண்டும் இல்லையென்றால், நாம் அடையாளம் தெரியாமல் போய்விடுவோம்.
இந்நிலை வரக்கூடாது என்றால் ஒட்டுமொத்த இந்து சமுதாயமும் எவ்வித வேறுபாடுகளையும் பார்க்காமல் தமிழ்ப்பள்ளிகளையும் ஆலயங்களையும் ஒன்றிணைந்து காக்க முன்வர வேண்டுமென, மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் வலியுறுத்தினார்.
“வரக்கூடிய நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலில், இரு விவகாரங்களையும் நாம் பொதுவில் முன்வைக்க வேண்டும். ஒன்று, எல்லாத் தமிழ்ப்பள்ளிகளிலும் சமயப் பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட வேண்டும். இரண்டாவது இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும்.
அவ்விரண்டு பரிந்துரைகளை ஏற்காத அரசியல் கூட்டணிக்கும் கட்சிகளுக்கும் நாம் வாக்களிக்கக்கூடாது. அவ்விவகாரங்களில் தாம் விட்டுக்கொடுக்கும் போக்கைக் காட்டக்கூடாது.
நடப்பில், நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. தோட்டப்புறங்களில் உள்ளவர்கள் அவர்களது பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பினாலும், நகர்ப்புறங்களில் சூழல் அவ்வாறு இல்லை. அதிகமானோர், அவர்களது பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை. அது, வரும் காலத்தில் தமிழ்ப்பள்ளிகளை இல்லாமல் செய்துவிடும்.
அதேப்போன்று, சமயக்கல்வியைக் இந்திய இளைஞர்களும் தவறான வழிக்கு செல்லும் நிலை உள்ளதால், தாம் அவ்விரு பரிந்துரைகளை முன்வைப்பதாக, இன்று மலேசிய இந்து சங்கம் கோலசிலாங்கூர் வட்டாரப் பேரவையின் 47ஆம் ஆண்டு திருமுறை விழாவில் சிறப்புரையாற்றிய போது, தங்க கணேசன் பேசினார்.
அதேப்போன்று, சமயக்கல்வியைக் கொண்டிருக்காத இந்திய இளைஞர்களும் தவறான வழிக்கு செல்லும் நிலை உள்ளதால், தாம் அவ்விரு பரிந்துரைகளை முன்வைப்பதாக, இன்று மலேசிய இந்து சங்கம் கோலசிலாங்கூர் வட்டாரப் பேரவையின் 47ஆம் ஆண்டு திருமுறை விழாவில் சிறப்புரையாற்றிய போது, தங்க கணேசன் கூறினார்.
மேலும் பேசிய அவர், நமது சமுதாயத்தில் அரசு சார இயக்கங்களிடையே ஒற்றுமை இருந்தாலும், இந்திய அரசியல்வாதிகளிடையே ஒற்றுமையில்லாததைச் சுட்டிக்காட்டினார்.
இந்திய அரசியல் தலைவர்கள் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்தால், நமது சமுதாயத்தில் எழுச்சி ஏற்படுவதைத் தடுக்க முடியாது எனவும் தங்க கணேசன் சூளுரைத்தார்.