Homeஅரசியல்ரஃபிஸி ரம்லியின் ஊடக சந்திப்பு; அன்வாருக்கான ஆதரவை மீட்டுக்கொள்ளவிருப்பதாக பரவும் ஆருடங்கள்!

ரஃபிஸி ரம்லியின் ஊடக சந்திப்பு; அன்வாருக்கான ஆதரவை மீட்டுக்கொள்ளவிருப்பதாக பரவும் ஆருடங்கள்!

கோலாலம்பூர், ஜூலை 6-

பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும், பொருளாதார அமைச்சராக பதவி வகித்தவருமான டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி, நாளை அக்கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஊடக சந்திப்பை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அளித்த ஆதரவை, அவர்கள் அனைவரும் திரும்பப் பெற உள்ளதாக, பெயர்ப்பட்டியல் அடங்கிய ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

ஆனால், அத்தகவலை பிகேஆர் துவாரான் தொகுதித் தலைவர் ரஸீஃப் ரகிமின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

“அந்தப் பட்டியல் போலியானது, வெறும் வதந்தி மட்டுமே,” என்று அவர் மலேசியாகினியிடம் சுருக்கமாகத் தெரிவித்தார்.

நாளை சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென்னின் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த ஊடக சந்திப்பு, தேசிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

கடந்த மே மாதம் நடந்த பிகேஆர் கட்சித் தேர்தலில் ரஃபிஸிக்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள் என்றும் ரஸீஃப் விளக்கினார்.

கடந்த மே மாதம் நடந்த பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ரஃபிஸி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more