கோலாலம்பூர், ஜூலை 8-

நீதித் துறையில் நியமனம் மற்றும் நீதித் துறையில் குறுக்கீட்டைத் தவிர்க்கும் வகையில் அரச விசாரணை ஆணையத்தை அமைக்க வலியுறுத்துவதோடு நீதித் துறை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் இயங்கும் வகையில் மலேசிய வழக்கறிஞர் மன்றம் அமைதிப் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அமைதிப் பேரணி ஜுலை 14ஆம் தேதி மதியம் 2 மணிக்கு புத்ரா ஜெயா நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி, பிரதமர் அலுவகத்திற்குச் சென்று, மகஜர் ஒன்றைத் தரும் என்று சொல்லப்படுகிறது.

அதனையடுத்து ஜூலை 25ஆம் தேதி வழக்கறிஞர் மன்றம், நாடு எதிர்நோக்கும் நீதித்துறை சிக்கல்களைப் பற்றி விவாதிக்கும் என்றும் அதன் தலைவர் எஸ்ரி அப்துல் வஹாப் தெரிவித்தார்.

-பொன் முனியாண்டி