சுபாங் ஜெயா, ஜூலை 8-
ஏப்ரல் 1ஆம் தேதி புத்ரா ஹைட்ஸில் பெட்ரோனாஸ் பெட்ரோல் குழாய் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், 81 வீடுகள் தீக்கிரையாகியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அந்தத் தீ சம்பவத்தை ஆய்வு செய்த கனிமவள மற்றும் புவிசார் இலாகா, அந்தத் தீ விபத்தானது அங்கு மேற்கொள்ளப்பட்ட தரைப் பகுதியின் பராமரிப்புப் பணிகளால் ஏற்படவில்லை என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட தரை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள விதிக்கப்பட்ட விதிமுறையின்படியே மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் விதி மீறல் எதுவும் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.
பராமரிப்பு வேலைகள் செய்யப்பட்ட தரைப் பகுதிக்குக் கீழே, மண் மிகவும் வலிமை குன்றியதாக இருந்த காரணத்தினால், மேல் பகுதி தரைக்குள் கீழே அமிழ்ந்து, எண்ணெய்க் குழாய் உடைந்து தீ பற்றியிருப்பதாக விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டதாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
-பொன் முனியாண்டி

