கோலாலம்பூர், ஜூலை 9-
சுகாதார துறை எதிர்நோக்கி வரும் சவால்களைச் சமாளிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான அணுகுமுறை மேம்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டின் பொது சுகாதார அமைப்பை மேம்படுத்த அமைச்சு இலக்கு வகுத்திருப்பதாக அதன் அமைச்சர் ஜுல்கிஃப்லி அகமது கூறினார்.
நோய் பரவுவதை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து அதன் செயல்திறனை அதிகரிப்பதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவுகிறது.
தற்போது 80 கிளினிக்குகளில் கிளவுட் அடிப்படையிலான மருத்துவ மேலாண்மை அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் சொன்னார்.


