Homeஅரசியல்மத்திய பாஸ் முன்னெடுக்கும் அன்வாருக்கு எதிரான பேரணிக்கு DHPP முழு ஆதரவு!

மத்திய பாஸ் முன்னெடுக்கும் அன்வாருக்கு எதிரான பேரணிக்கு DHPP முழு ஆதரவு!

கோலாலம்பூர், ஜூலை 21–

இம்மாதம் 26ஆம் தேதி, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக கோலாலம்பூரில் மத்திய பாஸ் நடத்தவுள்ள பேரணிக்கு, முழு ஆதரவை அளிப்பதாக, பாஸ் ஆதரவு பேரவை -DHPP அறிவித்துள்ளது.

பிரதமர் பொறுப்பிலிருந்து டத்தோ ஸ்ரீ அன்வாரை விலகக்கோரும் இப்பேரணி, நடப்பு அரசாங்கத்தின் ஆட்சியில் நிலவும் பொருளாதார நெருக்கடி, கொள்கை நிலைத்தன்மை இல்லாதது, தலைமை மீதான நம்பிக்கையின்மை ஆகியவற்றுக்கு எதிரான மக்களின் கூட்டு எழுச்சியாக அமைவதாக, அப்பேரவையின் ஊடக மற்றும் தொடர்பு வியூக இயக்குநர் டாக்டர் சுபாஷ் சந்திரபோஸ் எம். ஆறுமுகம் தெரிவித்தார்.

இது ஒரு சாதாரண பேரணி அல்ல, மாறாக, நாட்டை அழிவிலிருந்து காப்பாற்ற மக்கள் ஒன்றிணைந்து வெளிப்படுத்தும் சக்தியின் அடையாளம் எனவும் அவர் கூறினார்.

அனைத்து மலேசிய மக்களையும் குறிப்பாக, இனம், சமயம், பின்னணி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், பேரணியில் பங்கேற்க வேண்டும் என நாடு முழுவதும் இஸ்லாமியர் அல்லாத மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாஸ் ஆதரவு பேரவை – DHPP கேட்டுக்கொள்கின்றது.

நாம் அனைவரும் மலேசியாவை நேசிக்கும் குடிமக்கள். எதிர்கால தலைமுறைகளின் நலனுக்காக, நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகமான தலைமையை DHPP விரும்புகின்றது.

இஸ்லாமியரல்லாத மக்களின் பங்கேற்பு இந்தப் பேரணியில் ஒற்றுமையையும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதற்கு முக்கியமானது.

தற்போதைய தலைமையின் தோல்விகளால் மலேசியா மேலும் சீரழிவதைத் தடுக்க, இஸ்லாமியரல்லாத மக்களின் ஒருமித்த பங்கேற்பு, ஒரு வலிமையான அறிகுறியாக அமையும் என டாக்டர் சுபாஷ் சந்திரபோஸ் எம். ஆறுமுகம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more