Homeஅரசியல்ஜம்ரி வினோத், ஃபிர்டாஸ் வோங் மீது வழக்கு தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை -அஸாலினா

ஜம்ரி வினோத், ஃபிர்டாஸ் வோங் மீது வழக்கு தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை -அஸாலினா

கோலாலம்பூர், ஜூலை 22-

சர்ச்சைக்குரிய சமய போதகர்கள் ஜம்ரி வினோத், ஃபிர்டாஸ் வோங் ஆகியோருக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என சட்டத்துறை அலுவலகம் (A-GC) தெரிவித்துள்ளதாக, பிரதமர் துறையின் சட்டம் மற்றும் கழக சீர்திருத்தம் மீதான அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.

இருவர் மீதும் வழங்கப்பட்ட புகார்கள் தொடர்பாக போலீஸ் விசாரணையை மேற்கொண்டதும் பின்னர், மேல்கட்ட நடவடிக்கைக்காக, விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

சட்டத்துறை அலுவலகத்தின் கருத்தின் அடிப்படையில், தற்போது இருக்கும் சட்ட விதிகளின் கீழ் எந்தவொரு குற்றத்தின் அம்சங்களை நிரூபிக்க போதுமான அறிக்கைகள் இல்லை என்பதால், இருவர் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக, நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதிலில் டத்தோ ஸ்ரீ அஸாலினா தெரிவித்தார்.

ஜம்ரி மற்றும் ஃபிர்டாஸ் மீது நூற்றுக்கணக்கான போலீஸ் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தும், அவர்கள் மீது இதுவரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படாதது ஏன் என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் எழுப்பிய கேள்விக்கு டத்தோ ஸ்ரீ அஸாலினா இவ்வாறு பதிலளித்தார்.

spot_img

latest articles

explore more