கோலாலம்பூர், ஜூலை 22-

மலேசிய மக்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பாக, வாழ்க்கைச் செலவு சுமையை எதிர்கொள்ளும் வகையில் அரசாங்கம் ஒரு முக்கியமான திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதற்கு முன்பு தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இந்த அறிவிப்பை மிகவும் விரிவாகவும், உறுதியாகவும் தயாரிக்க, நிதி அமைச்சின் கீழ் உள்ள அவரது குழுவிற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், அந்த முக்கிய திட்டம் குறித்த அறிவிப்பை பிரதமர் நாளை வெளியிடவிருப்பதாக தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபாட்ஸில் அவரது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, நாளை காலை மணி 10.30க்கு பிரதமர் அந்த அறிவிப்பை வெளியிடவிருப்பதாக, அவர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு வாழ்க்கைச் செலவு சுமையை குறைக்கும் வகையில் மக்களுக்கு பயனளிக்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.