கோலாலம்பூர், ஆக.6-
மசீசவின் எதிர்காலம் குறித்து அதன் தலைவர்களே முடிவெடுப்பார்கள். இதில் வெளியார் யாரும் தலையிட்டு கருத்துச் சொல்லத் தேவையில்லை என்று அக்கட்சியின் தலைவர் வீ கா சியோங் தெரிவித்தார்.
மடானி அரசாங்கத்தில் அம்னோ உறுப்பியம் பெற்றிருந்தாலும் மசீசாவிற்கும் மஇகாவிற்கும் முக்கியத்துவம் தரப்படாமல் வேண்டப்படாத விருந்தாளியாக நடத்தப்படுகின்றன.
மசீச தேசிய முன்னணியிலிருந்து விலகி, தனியாகச் செயல்பட வேண்டுமென்று கட்சித் தலைவர்களும் அனுதாபிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
அது பற்றிக் கருத்துரைத்த வீ கா சியோங், உரிய நேரத்தில் கட்சி அது பற்றிக் கலந்தாலோசித்து முடிவை வெளியிடும் என்றும் அதில் சம்பந்தப்படாத தரப்பினர் தலையிட்டு கருத்து சொல்லவோ அல்லது ஆரூடம் கூறவோ தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-பொன் முனியாண்டி

