Homeமலேசியாசாலை வரி, காப்புறுதி இல்லாத  10 விலையுயர்ந்த கார்கள் பறிமுதல்! 

சாலை வரி, காப்புறுதி இல்லாத  10 விலையுயர்ந்த கார்கள் பறிமுதல்! 

சிரம்பான், ஆக. 8-

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சாலை வரி மற்றும் ஈராண்டு காலத்திற்கு காப்புறுதியைப் புதுப்பிக்கத் தவறிய 10 விலையுயர்ந்த கார்களை மாநில சாலைப் போக்குவரத்து இலாகா பறிமுதல் செய்திருப்பதாக அதன் இயக்குநர் ஹனிஃப் யுசாப்ரா யூசோப் தெரிவித்தார்.

விலையுயர்ந்த கார்களை வாங்கிப் பயன்படுத்துவோர் அவற்றிற்கான சாலை வரி மற்றும் காப்புறுதியைச் செலுத்தாததற்குத் தெரிவிக்கப்படும் சாக்குப் போக்குகள் ஏற்றுக் கொள்ளத்தக்கவையாக இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

காப்புறுதி செலுத்தாமல் இருந்தால், வாகன விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு பெற முடியாமல் போகும் அபாயம் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார் .

மேற்கண்ட கட்டணங்களைச் செலுத்திய பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றார் அவர்.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more