புத்ரா ஜெயா, ஆக. 9-
தென் தாய்லாந்தில் முஸ்லிம் இன மக்களுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கிடையேயும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு, பல ஆண்டு காலமாக ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், அப்பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்ய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன் வந்துள்ளார்.
கிளந்தான், தாமான் ஸ்ரீசெம்பாக்காவில் நேற்று நடந்த ஒன்றுகூடும் நிகழ்ச்சியில் உரையாற்றிய அன்வார், அந்தப் பிரச்சினையில் மலேசியா தலையிட்டு முஸ்லிம்களின் இஸ்லாமிய கல்வி, மலாய் மொழி ஆகியவை பேணப்படுவதற்கான தீர்வைக் காண உதவ முன்வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலைதில் மலேசியாவின் தலையீட்டினால் தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்குமான மோதல் தடுக்கப்பட்டு அங்கு அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
-பொன் முனியாண்டி