Homeசமூகம்மீண்டும் ஜிஎஸ்டி? மக்களுக்குத் தீரா தொல்லை! 

மீண்டும் ஜிஎஸ்டி? மக்களுக்குத் தீரா தொல்லை! 

கோலாலம்பூர், ஆக.9-

நாட்டில் பொருள் சேவை வரியை (ஜிஎஸ் டி) மீண்டும் அமல்படுத்தினால் அது வசதி குறைந்த மக்களுக்குப் பெரும் சிரமத்தையும் துன்பத்தையும் ஏற்படுத்தும் என பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி எச்சரித்துள்ளார்.

ஜிஎஸ்டியின் 6 விழுக்காடு வரி அமல்படுத்தப்பட்டால், தற்போது பொருள்களுக்கான வரியைச் செலுத்த விலக்களிக்கப்பட்ட வசதி குறைந்த மக்கள், புதிய வரியைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அவர்கள் மேலும் சிரமத்தை அனுபவிக்க வேண்டிவரும் என்றும் ரபிஸி சுட்டிக் காட்டியுள்ளார்.

ஜிஎஸ்டியினால் பொருள்களின் விலை 6 அல்லது அதற்கும் மேலான விகிதத்தில் விலை உயரும் அபாயமும் இருப்பதாக அவர் எச்சரித்தார். இதற்கு முன்னர் நாட்டில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது, வசதி குறைந்தோர் சொல்லொனா தொல்லையில் சிக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் அன்வார் இப்ராஹிம், ஜிஎஸ்டியை அமல்படுத்த தற்போதைக்குத் திட்டமில்லை என்றும் மக்களின் மாத வருமானம் 4,000 ரிங்கிட்டுக்கும் அதிகமாக அதிகரிக்குமானால், அப்போது அதனை அமல்படுத்த பரிசீலிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more