பத்து பாஹாட்:

12 வயதுக்குட்பட்ட தேசிய அளவிலான பத்து பாஹாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஒன் அபு பாக்கார் கிண்ணக் கால்பந்து போட்டியில் லாடாங் ரின்சிங் தமிழ்ப்பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

நவம்பர் 22-ஆம் தேதி Temenggong Ibrahim Penggaram தேசிய பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஒரே தமிழ்ப் பள்ளியாகலாடாங் ரின்சிங் தமிழ்ப்பள்ளி அணி பங்கேற்றது.

இந்த அணிக்கு மலேசிய மற்றும் சிலாங்கூர் மாநில முன்னாள் கால்பந்து வீரர்கள் கே. குருசாமி மற்றும் பி. நந்தகுமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இறுதிப்போட்டியில், Temenggong Ibrahim Penggaram தேசிய பள்ளி அணியை 3–0 என்ற கணக்கில் வீழ்த்தி, லாடாங் ரின்சிங் தமிழ்ப்பள்ளி வெற்றியாளர் கிண்ணத்தை கைப்பற்றியது.

மேலும், அதிக கோல்கள் அடித்த ‘பேஸ்ட் ஸ்கோரர்’ விருதையும், சிறந்த கோல்கீப்பர் விருதையும் இவ்வணி வென்றது என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.