கோலாலம்பூர்:

உடல் ஆரோக்கியம், நிலைத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும் ஸ்டிக் மொபிலிட்டி உடற்பயிற்சி கிள்ளான் SMK Methodist ACS இடைநிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.

உடற்பயிற்சியின் போது பயன்படுத்தப்படும் நெகிழ்வான குச்சி, தசைகளின் செயல்பாடு, மூட்டு இயக்கம் மற்றும் உடல் கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. விளையாட்டு வீரர்கள் காயம் இன்றி செயல்திறன் உயர்த்துவதிலும் இந்த முறைக்கு முக்கிய பங்குள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் கேலாலம்பூர் Gallantry Fitness நிறுவனத்தைச் சேர்ந்த நைஜீரியாவின் முன்னாள் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்திறன் வீரர், மேலும் ஆசிய பிட் டெஸ்ட் மேன் பட்டம் பெற்ற டைமன் ஒங்பீட் கலந்து கொண்டு விளக்கவுரை வழங்கினார்.

அத்துடன் MAP விளையாட்டு மைய தலைவர் மற்றும் நிறுவனர் டத்தோஸ்ரீ டாக்டர் முஹமட் அடாம் பிரகாஷ், ACS பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், பள்ளி முதல்வர் டாக்டர் அண்ணாதுரை முருகையா, மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் டத்தோ டாக்டர் எம். ஜெய பிரகாசம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், பயிற்சியை நிறைவு செய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்