கோலாலம்பூர்:
2021 ஆம் ஆண்டு கோவிட் – 19 காலத்தில் மாணவர்களுக்கு இயங்கலை வாயிலாக கணிதப் பாட பட்டறையை 14 மணி நேரம் இடைவிடாது நடத்தியதற்காக ஆசிரியர் ஜனகன் ஆறுமுகம் ஆசியான் சாதனை விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
ஸ்ரீ மூடாவில் இயங்கி வரும் அரினா மெட்ரிக் டியூஷன் மையத்தின் முதல்வரான ஜனகன் இந்த மையத்தின் கணிதம் மற்றும் கூடுதல் கணித பாட ஆசிரியரும் ஆவார்.
2025 எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சியில் ஆசியான் ரிகோர்ட் தலைமை செயல்முறை அதிகாரி எட்ரிக் கோவினால் ஜனகன் இவ்விருதும், இளம் சாதனையாளர் விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

