சிரம்பான்:

நெகிரி செம்பிலான் அரசியலமைப்பு நெருக்கடி காரணமாக, பக்காத்தான் ஹராப்பான் (PH) அரசாங்கத்தில் நீடிப்பதை விட எதிர்க்கட்சியாக இருப்பதே மேல்.

மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாருன் செய்த தவறுகளுக்கு அம்னோ பொறுப்பேற்க முடியாது;

யாருக்காகவும் கட்சியின் எதிர்காலத்தை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என மாநில அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ ஜலாலுதீன் அலியாஸ் தெரிவித்துள்ளார்.

யாருக்காகவும் கட்சியின் எதிர்காலத்தை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

வரும் 16-வது பொதுத்தேர்தலில் அனைத்து மாநிலத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று, அம்னோ மீண்டும் தனிப்பெரும் சக்தியாக உருவெடுப்பதே தற்போதைய முக்கிய இலக்கு என அவர் குறிப்பிட்டார்.