லண்டன், ஜூலை  19-

மன்செஸ்டர் சிட்டியின் முன்னணி கோல் காவலராக இருந்த ஜோ ஹார்ட் அடுத்த பருவம் முழுக்க வெஸ்ட் ஹெம் யுனைடெட் அணியில் விளையாடுவார். அவரை 1 ஆண்டுக்கால இரவல் ஆட்டக்காரரான வெஸ்ட் ஹெம் யுனைட்டெட் ஒப்பந்தம் செய்துள்ளது.

2016ஆம் ஆண்டு வரை மன்செஸ்டர் சிட்டியின் முன்னணி கோல் காவலரான ஜோ ஹார்ட் இருந்தார். 2016ஆம் ஆண்டு மத்தியில் அவ்வணியின் நிர்வாகிப் பொறுப்பில் பெப் குவாடியாலோ அமர்த்தப்பட்ட போது, அவர் முதல் வேலையாக ஜோ ஹார்ட்டை அணியிலிருந்து வெளியேற்றினார்.

இந்நிலையில் கடந்த பருவம் முழுக்க ஜோ ஹார்ட் இத்தாலி தொரினோ அணியில் விளையாடினார். இந்த முறை அவர் மன்செஸ்டர் சிட்டி அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹெஸ்ட் ஹெம் அணியில் இணைந்துள்ளார். இந்த அணியின் வெற்றிக்காக தாம் உழைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.