முகப்பு > முதன்மைச் செய்திகள் > இந்திய முஸ்லிம்களுக்கு மட்டும் பூமிபுத்ரா அந்தஸ்தா?
முதன்மைச் செய்திகள்

இந்திய முஸ்லிம்களுக்கு மட்டும் பூமிபுத்ரா அந்தஸ்தா?

கோலாலம்பூர், ஜூலை 19-
இந்நாட்டில் பிறந்த அனைத்து குடிமக்களுக்கும் பூமிபுத்ரா அந்தஸ்து வழங்காமல் இந்திய முஸ்லிம்களுக்கு மட்டும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வழங்க முன்வருவது ஏன்? என மலேசிய இந்தியர் முன்னேற்ற சங்கம் (மீப்பாஸ்) கேள்வியெழுப்பியுள்ளது.

இவ்விவகாரத்தில் இந்நாட்டில் பிறந்த கிருஸ்து, இந்து, சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த குடிமக்களின் நிலை என்ன என்றும் அந்த சங்கம் கேள்வியெழுப்பியது.

இது குறித்து மீப்பாஸ் இயக்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பாரதிதாசன் கூறுகையில், இந்நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் பெரிய பங்கினை ஆற்றியுள்ளனர். அவ்வகையில், இந்நாட்டில் பிறந்து வளர்ந்த அனைத்து சமூகத்தினர்களுக்கும் பூமிபுத்ரா அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

அனைத்து இனங்களுக்கும் பொதுவான பிரதமராக விளங்கும் டத்தோஸ்ரீ நஜீப் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் பூமிபுத்ரா அந்தஸ்தை வழங்குவதாக கூறுவது அதிருப்தி அளிக்கின்றது. இரட்டை நிலைபாட்டை காட்டுவதாக அவர் கூறினார்.

வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் இந்திய முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக பிரதமர் நஜீப் இவ்வாறு அறிவித்தாரா என பாரதிதாசன் இன்று வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக கேள்வியெழுப்பினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன