அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > பெட்ரோல், டீசல் விலை நிலை நிறுத்தம்!
முதன்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை நிலை நிறுத்தம்!

கோலாலம்பூர், ஜூலை 19
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் இவ்வாரமும் எவ்வித மாற்றமுமின்றி நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
ரோன் 95 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 1 வெள்ளி 97 காசும் ரோன் 97 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 22 காசாகவும் இவ்வாரமும் தொடர்கின்றது.
அதேப்போன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 1 வெள்ளி 96 காசாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த விலைகள் வருகின்ற 26ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன