Homeகலை உலகம்‘ராஜாக்கள்’ திரைப்படத்தின் முதல் டீசர் வெளியீடு; 24 மணி நேரத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக்...

‘ராஜாக்கள்’ திரைப்படத்தின் முதல் டீசர் வெளியீடு; 24 மணி நேரத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்தது

கோலாலம்பூர்:

மலேசியத் தமிழ் திரைப்படமான ‘ராஜாக்கள்’ திரைப்படத்தின் முதல் டீசர் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 3 லட்சத்து 4 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றுகூடும் ஐந்து நண்பர்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அவர்களின் சந்திப்புக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் படத்தின் முதல் டீசர் அமைந்துள்ளது.

ஷைஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் திரைப்படத் தயாரிப்பான இப்படத்தை சி. மார்ட்டின் ராஜ் எழுதி இயக்கியுள்ளார்.

இதில் இர்ஃபான் ஜைனி, ரவின் ராவ் சந்திரன், தேவகுரு சுப்பையா மற்றும் மறைந்த பர்வின் நாயர் சுரேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் மார்ட்டினும் இப்படத்தில் நடித்துள்ளார்.

குறிப்பாக, கஜா கதாபாத்திரத்தில் நடித்த மறைந்த பர்வின் நாயரின் இழப்பு இப்படத்தைப் படக்குழுவினருக்கு உணர்வுபூர்வமான படைப்பாக மாற்றியுள்ளதாக இயக்குநர் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

ஷைஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டீ ஜாம் ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை கோமெட் புரொடக்ஷன்ஸ் விநியோகம் செய்கிறது.

தமிழில், மலாய் வசன வரிகளுடன் உருவாகியுள்ள ‘ராஜாக்கள்’ திரைப்படம் வரும் டிசம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

spot_img

latest articles

explore more