ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > ப.மகேஸ்வரனின் ‘எங்கள் தங்கம் இலவச கலை இரவு 2017
கலை உலகம்சமூகம்

ப.மகேஸ்வரனின் ‘எங்கள் தங்கம் இலவச கலை இரவு 2017

மலேசிய இந்திய திவ்விய கலை கலாசார கலைஞர் சங்கம் பெருமையுடன் வழங்கும் ப.மகேஸ்வரனின் எங்கள் தங்கம் கலை இரவு மனித நேய மாமணி ரத்னவள்ளி அம்மா நல்லாசியுடன் எதிர்வரும் 28.7.2017ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.

பல குரல் மன்னன் ப.மகேஸ்வரனின் தயாரிப்பிலும் அறிவிப்பிலும் நிகழ்ச்சி மலர உள்ளது. மக்கள் திலகம் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் இக்கலை இரவுக்கு டாக்டர் புருஷோத்தமன் இன்னிசை வழங்குகிறார்.

நாட்டின் புகழ்பெற்ற கலைஞர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆரின் படப்பாடல்கள் மட்டுமல்லாமல், பழைய புதிய பாடல்களையும் பாடி மகிழ்விக்கவுள்ளனர். எம்ஜிஆர் ஹரியின் அபிநயமும் உண்டு. ப.மகேஸ்வரனின் கலகலப்பு எனும் நகைச்சுவை ஒளிநாடாவும் இந்நிகழ்ச்சியில் வெளியீடு செய்யப்படும். இக்கலை இரவை கண்டு களிக்க அனைவரும் திரண்டு வாருங்கள். தொடர்புக்கு ப.மகேஸ்வரன் 016-2811709

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன