புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > ஹயாஷி ஹா கராத்தே கழகம் சாதனையாளர்களை உருவாக்குகிறது!
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

ஹயாஷி ஹா கராத்தே கழகம் சாதனையாளர்களை உருவாக்குகிறது!

கோலாலம்பூர், ஜூலை 20-

ஹயாஷி ஹா கராத்தே கழகம் கராத்தே விளையாட்டில் பல சாதனையாளர்களை உருவாக்கி வருகிறது என்று பேரின்பம் மலேசியா இயக்கத்தின் தேசியத் தலைவர் யு. தாமோதரன் நேற்று கூறினார். நாட்டில் அதிகமான கராத்தே விளையாட்டாளர்களை உருவாக்கிய பெருமையை ஹயாஷி ஹா கராத்தே கழகம் கொண்டிருக்கிறது.

தலைமை மாஸ்டர் ஷியான் டி. பொன்னையா தொடங்கி மாஸ்டர் அறிவழகன் வரை அனைவரும் தரம் வாய்ந்த கராத்தே வீரர்களை உருவாக்கி வருகின்றனர். இவ்வீரர்கள் மலேசிய ரீதியில் நடைபெறும் போட்டிகளை தவிர்த்து அனைத்துலக ரீதியிலும் பல வெற்றிகளை குவித்து வருகின்றனர்.

இவ்வீரர்களின் சாதனைகளுக்கு அனுபவம் வாய்ந்த மாஸ்டர்களின் கடுமையான பயிற்சிகளே முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக இளம் விளையாட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவ்வப்போது பல போட்டிகளை அக்கழகம் நடத்தி வருகிறது. இவ்விளையாட்டுப் போட்டிகளின் மூலம் பல திறமையான விளையாட்டாளர்களை அனைவரும் அடையாளம் காண முடிகிறது என்று தாமோதரன் கூறினார்.

ஹயாஷி ஹா கராத்தே கழகத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு போட்டி அனுபவங்களை வழங்கும் வகையில் மாபெரும் கராத்தே போட்டி அண்மையில் நடைபெற்றது. நாடு தழுவிய நிலையில் இருந்து 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தினர்.

ஆசிய ஹயாஷி ஹா கராத்தே கழகத்தின் தலைவர் மாஸ்டர் ஷியான் டி. பொன்னையா, மாஸ்டர் அறிவழகன், பேரின்பம் மலேசியா இயக்கத்தின் தேசியத் தலைவர் யு. தாமோதரன், துணைத் தலைவர் ஜெயராமன், தலைமை செயலாளர் குபேரன், மலேசிய கராத்தே கழகத்தின் தலைமை செயலாளர் சூர்யா உட்பட பலர் இப்போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். அதே வேளையில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகளையும் எடுத்து வழங்கி சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன