Homeமலேசியாவெள்ளப் பேரிடர் பகுதிகள் தொற்று நோய் பரவவில்லை!

வெள்ளப் பேரிடர் பகுதிகள் தொற்று நோய் பரவவில்லை!

புத்ராஜெயா, நவ.10 – 

கெடா, பினாங்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் தொற்று நோய் ஏதும் பரவவில்லை என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.  அதேவேளையில் சம்பந்தப்பட்ட இடங்களில் பொதுமக்கள் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள்  மற்றும்  மகப்பேறு , ரத்த சுத்திகரிப்பு போன்ற சுகாதார சேவைகளில் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை எனவும் அவர் சொன்னார்.

சனிக்கிழமை அவ்விரண்டு மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்த அங்கு பணியாற்றிய  50 மருத்துவ குழுக்களிடம் இருந்து கிடைக்க பெற்ற அறிக்கை அதனை உறுதிப்படுத்துவதாக டாக்டர் சுப்ரமணியம் புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1, 111 பேரில் 36 விழுக்காட்டினர் மீது மருத்துவ சோதனை மேற்கொள்ளப்பட்டு விட்டதாக டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார். வெள்ள நிவாரண மையங்களிலும் சுகாதார தரத்தை உறுதிச் செய்ய   தமது அமைச்சு பல்வேறு சோதனைகளை மேற்கொண்டதாக அவர் மேலும் சொன்னார்.

வெள்ளப் பாதிக்கப்பட்ட இடங்களில் அமலாக்க தரப்பினரின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுமாறு அவர் பொதுமக்களைக் கேட்டு கொண்டார். சமைக்கப்படாத உணவுப் பொருட்களை உண்ண வேண்டாம் என தெரிவித்த டாக்டர் சுப்ரமணியம் கொதிக்க வைக்கப்பட்ட குடிநீரை மட்டுமே அருந்துமாறு கேட்டு கொண்டார்.

spot_img

latest articles

explore more