கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு!

0
17

அலோர்ஸ்டார், நவ.16
கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்ததைத் தொடர்ந்து குபாங் பாசு மாவட்டத்தில் மேலும் மூன்று வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டது.  இன்று காலை மணி 8.00 வரையிலான தகவலின்படி நேற்று மாலையில் 219ஆக இருந்த பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 496ஆக உயர்வடைந்திருப்பதாக குபாங் பாசு மாவட்டத்தின் பொது தற்காப்பு துறையின் அதிகாரி கமாருல்சாமான் காசா தெரிவித்தார்.

கம்போங் பெத்தோங், கம்போங் தெபிங், கம்போங் லாஹார் ஆகியவற்றிலுள்ள தொழுகை இடங்களில் இந்த வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் அவர் கூறினார். கம்போங் பெத்தோங் தொழுகையிடத்தில் 18 குடும்பங்களை சேர்ந்த 94 பேரும் கம்போங் தெபிங்கில் 17 குடும்பங்களை சேர்ந்த 67 பேரும் கம்போங் லாஹாரில் 22 குடும்பங்களை சேர்ந்த 100 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று சங்லுன் இடைநிலைப்பள்ளியில் திறக்கப்பட்ட வெள்ள நிவாரண மையத்தில் 59 குடும்பங்களை சேர்ந்த 235 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கமாருல்சாமான் காசா சொன்னார்.