36 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பெரு!

0
5

லீமா, நவ.16 –

36 ஆண்டுகளுக்குப் பின்னர் தென் அமெரிக்க மண்டலத்தைச் சேர்ந்த பெரு, உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பங்கேற்கவுள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற பிலே ஆப் ஆட்டத்தில் பெரு 2 – 0 என்ற கோல்களில் நியூ சிலாந்தை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் 2018 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு கடைசியாக தேர்வுப் பெற்ற அணியாக பெரு விளங்குகிறது.

நியூ சிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பெருவின் முதல் கோலை 27 ஆவது நிமிடத்தில் ஜெபர்சன் பார்ஹான் போட்டார். இரண்டாம் பாதியில் பெருவின் இரண்டாவது கோலை கிறிஸ்டியான் ராமோஸ் புகுத்தினார். 2- 0 என்ற மொத்த கோல் எண்ணிக்கையில் பெரு உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் கால் பதித்துள்ளது.