சிலாங்கூரில் அம்னோ இல்லாமல் அதிக வளர்ச்சி! -அஸ்மின் அலி

0
6

பகாங், நவ.20-

கடந்த 2008-இல் இருந்து சிலாங்கூர் மாநிலத்தில் நடந்து வரும் பக்காத்தான் ஆட்சிக் காலத்தில் மலாய்காரர்களின் நலன் காக்கப் படுகிறது என்று கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இது மட்டுமில்லாமல் சீனர்கள் மற்றும் இந்தியர்களின் உரிமைகளும் காக்கப் பட்டு வருகிறது என்றார்.

“பக்காத்தானுக்கு நாட்டை ஆளும் திறன் இல்லை என்று அம்னோ கூறுகிறது. நாங்கள் வெறும் அரசியல் பேசுவது மட்டும் திறமைசாலிகள் என்றார்கள். அப்படி நாங்கள் ஆட்சி செய்தால் மலாய்காரர்கள் கிழங்கு தான் சாப்பிட வேண்டும் என்று சாடினார்கள். ஆனால் இன்று, சிலாங்கூர் அம்னோ இல்லாமல் வளர்ச்சி கண்டுள்ளது. சிலாங்கூர் மாநில அம்னோ பொருட்காட்சி சாலையில் புகுந்து விட்டது. மலாய்காரர்களின் உரிமைகள் தொடர்ந்து பேணிக் காக்கப்படுகிறது. அதே வேளையில், மற்ற சமூகங்களின் நலன்களையும் காக்கப்படுகிறது,” என்று பத்து காப்போரில் நடந்த கெஅடிலான் கட்சியின் சூறாவளி பயண கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது தெரிவித்தார்.

”சிலாங்கூர் மாநில கையிருப்பு ரிம 3.5 பில்லியனை தொட்டு உள்ளது. எல்லா மக்களும் பலன் அடைந்துள்ளனர். பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்கள் (ஐபிஆர்) மக்களுக்கு நன்மைகள் கிடைத்துள்ளது,” என்று விவரித்தார்.

சிலாங்கூர் மாநில பக்காத்தான் அரசாங்கத்தின் கீழ் கிடைத்த நன்மைகள் மற்ற மாநிலங்களிலும் வர வேண்டும் என்றால் மக்கள் தேசிய முன்னணியை புறக்கணிக்க வேண்டும். அதற்கு மாறாக மக்கள் பாக்காத்தான் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சூளுரைத்தார்.

(நன்றி, சிலாங்கூர்கினி)