திங்கட்கிழமை, ஜூன் 1, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > பள்ளத்தில் பாய்ந்தது லோரி; இந்திய ஆடவர் பலி!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

பள்ளத்தில் பாய்ந்தது லோரி; இந்திய ஆடவர் பலி!

உலுதிரெங்கானு, நவ.21-

இரும்பு துகள்களை ஏற்றி வந்த லோரி சுமார் 10 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தில் பாய்ந்ததில் அதன் ஓட்டுநரான இந்திய ஆடவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று மாலை மணி 3.00 அளவில் ஜாலான் அரிங்-சுங்கை காவி அருகாமையில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஜெகநாதன் பத்துமலை என அடையாளம் கூறப்பட்டது.

அவர் ஓட்டி வந்த லோரி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்ததில் ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

லோரியினுள் சிக்கிக்கொண்டிருந்த ஜெகநாதனின் சடலத்தை வெளியே கொண்டு வருவதற்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் உறுப்பினர்களுக்கு சுமார் 3 மணி நேரம் பிடித்தது.

ஜெகநாதனின் சடலம் பிரேத பரிசோதணைக்காக உலுதிரெங்கானு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் செக்ஷன் 41(1) கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனிடையே, இந்த விபத்து ஓட்டுநரின் அலட்சியத்தால் நிகழ்ந்ததாக உலுதிரங்கானு சாலை பாதுகாப்பு கண்காணிப்பாளரான நஸ்ருடின் தாவாங் தெரிவித்தார்.

சம்பவ இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கு முன்பு எச்சரிக்கை அறிவிப்பு உள்ளது. அந்த அறிவிப்பை பெரும்பாலான ஓட்டுநர்கள் பொருட்படுத்துவதில்லை.

இந்த சாலை எல்லா வகையான வாகனங்களுக்கும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதில் அதிகமான வளைவுகள் உள்ளதால் அது குறித்த எச்சரிக்கை அறிவிப்புகள் நிறைய உள்ளது. ஆயினும், இச்சாலையில் அதிகமான விபத்துகள் ஏற்பட காரணம் ஓட்டுநர்கள் அதிவேகத்தில் செல்வதால் ஆகும் என நஸ்ருடின் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன