புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > மீன் தலைகறி 600 வெள்ளியா?
மற்றவைமுதன்மைச் செய்திகள்

மீன் தலைகறி 600 வெள்ளியா?

கோலாலம்பூர், நவ. 21-

தலைநகரில் நன்கு அறிமுகமான உணவகம் ஒன்றில் இரு குடும்பத்தார் மீன் தலைகறி மட்டும் சாப்பிட்டதற்கு வெ.600 கட்டண ரசிது வழங்கப்பட்டது. தற்போது அந்த கட்டண ரசிது சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நேற்று இரவு உணவு உண்பதற்காக அவர்கள் சம்பந்தப்பட்ட உணவகத்திற்குச் சென்றுள்ளனர். அவர்கள் நான்கு தட்டுகளில் மீன் தலைகறி வாங்கி சாப்பிட்டனர். அதற்கு அநியாயமாக வெ.600 கட்டண ரசிது வழங்கப்பட்டது.

இந்த நான்கு மீன் தலைகறி தட்டுகளுக்கு மட்டும் வெ.600 விதிக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என உணவகத்திற்கு தலைகறி சாப்பிட வந்த அஸ்ராபுடின் சாயிட் (வயது 56) தெரிவித்தார்.

நாங்கள் வாடிக்கையாக மீன் தலைகறி சாப்பிடுபவர்கள். பொதுவாகவே வெ.50 முதல் வெ.80 வரைதான் கட்டணம் விதிக்கப்படும். ஆனால், ஒரு தட்டிற்கு வெ.150 கணக்கிடப்பட்டதாக அவர் சொன்னார்.

வழக்கமாக சாப்பிடும் உணவு என்பதால் நான் உணவு விலை பட்டியலையும் பார்க்கவில்லை. மீன் தலைகறி அதிகம் விலையாக இருப்பதன் காரணத்தை உணவக காசாளரிடம் கேட்டப் போது மீன் தலையின் அளவை வைத்து கட்டணம் விதிக்கப்படும் என அவர் கூறியதாக அஸ்ராபுடின் தெரிவித்தார்.

எந்தவொரு உணவகத்திற்குச் சென்றாலும் முதலில் விலை பட்டியலை பார்த்துவிட்டு சாப்பிட வேண்டும். மற்றவர்களும் இது போன்ற சம்பவங்களில் ஏமாறாமல் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன