புதன்கிழமை, ஜனவரி 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > டிச. 15 பிரமாண்டமாக வெளியீடு காண்கிறது ‘‘பள்ளிப்பருவத்திலே
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

டிச. 15 பிரமாண்டமாக வெளியீடு காண்கிறது ‘‘பள்ளிப்பருவத்திலே

கடந்த கால நினைவுகளை உடனுக்குடன் மறப்பவர்கள் கூட தங்களின் பள்ளிப்பருவத்தை மறப்பதில்லை. அதை மீண்டும் நினைவுப்படுத்தும் வகையில், உருவாக்கியிருக்கும் திரைப்படம்தான் ‘பள்ளிப்பருவத்திலே இத்திரைப்படத்தை டி. வேலுவின் வி.கே.பி.டி. கிரியேஷன் தயாரிக்க வாசுதேவ் பாஸ்கர் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை மலேசியாவில் எஸ்.பி. புரோடக்ஷன் பெருமையுடன் வெளியீடு செய்கிறது.

இத்திரைப்படத்தில் உள்ளத்தை அள்ளித்தா, நாட்டாமை, மேட்டுக்குடி, முறை மாமன் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த சிற்பியின் புதல்வன் நந்தன் புதுமுகமாக இத்திரைப்படத்தில் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தில் கற்றது தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய வெண்பா கதாநாயகியாக நடிக்கிறார் என  பிரிக்பில்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் படத்தின் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் கூறினார்.

அதோடு இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ். ரவிக்குமாரை அணுகியப்போது, அவர் தமக்கு வேலை பளு அதிகமாக உள்ளது எனக் கூறி மறுத்துவிட்டார். பின்னர் இத்திரைப்படத்தின் கதையை கேட்டப்பிறகு எப்போது ஷூட்டிங் போகலாம் என கேட்டதாகவும் இயக்குநர் கூறினார்.

இவர் உட்பட இத்திரைப்படத்தில் ஆர்.கே. சுரேஷ், பொண்வண்ணன், ஊர்வசி, தம்பி ராமையா என பல புகழ்பெற்ற முன்னணி நடிகர்களும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். அண்மையில் சென்னை கலைவாணர் அரங்கில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக விமர்சையாக நடந்துள்ளது. இதில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் என பல பிரபலங்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

விஜய் பாஸ்கரின் இசையில் வெளிவந்த பாடல்களை அவர்கள் அனைவரும் வெகுவாகப் பாராட்டினார்கள். அதோடு இப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது. குறிப்பாக இத்திரைப்படத்தில் 3 பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘‘மொசகுட்டி கண்ணால ஒருத்தி என்ற பாடலை மலேசிய மண்ணின் மைந்தர் விக்னேஸ்வரன் பாடியுள்ளார். கடந்த ஆண்டு தமது பிறந்தநாள் விழாவில் விக்னேஸ்வரன் பாடினார். அவரின் குரலை கேட்டு மைய்மறந்து போன இயக்குநர் பாஸ்கர், பள்ளிப்பருவத்திலே திரைப்படத்தில் பாட வாய்ப்பு வழங்கியுள்ளார். அதோடு விக்னேஸ்வரன் இன்னும் பல புகழ்பெற்ற பாடல்களைப் பாடி மலேசிய மண்ணுக்கு பெருமை சேர்ப்பார் எனவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் டி வேலு மலேசியா நாட்டைச் சேர்ந்தவர்தான். இன்னும் தரமான பல திரைப்படங்களை தயாரிக்கவும் அவர் முடிவுச் செய்துள்ளார். டிசம்பர் 15ஆம் தேதி இத்திரைப்படம் வெளியிடப்படுகின்றது. மலேசியாவில் இதுவரையில் 27 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியிடப்படுவது உறுதியாகிவிட்டது,

தரமான நல்ல படைப்புகளுக்கு மலேசிய ரசிகர் என்றும் வற்றாத ஆதரவை வழங்குவார்கள். அந்த வகையில் பள்ளிப்பருவத்திலே இத்திரைப்படத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவார்கள் என நம்புவதாக இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன