spot_img
9.9 C
London
spot_img
Home மலேசியா கல்வி சிகாம்பூட் தமிழ்ப்பள்ளியில் மெய் நிகர் கற்றல் கற்பித்தல் வகுப்பறை!

சிகாம்பூட் தமிழ்ப்பள்ளியில் மெய் நிகர் கற்றல் கற்பித்தல் வகுப்பறை!

0
309

கோலாலம்பூர், நவ.22-

நவீன கல்விமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிகாம்பூட் தமிழ்ப்பள்ளியில் மெய் நிகர் கற்றல் கற்பித்தல் வகுப்பறைகள் திறக்கப்பட்டுள்ளது.

இந்த வகுப்பறைகளை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சரும் கூட்டரசு பிரதேச ம.இ.கா. தலைவருமான டத்தோ எம்.சரவணன் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் பேசிய டத்தோ சரவணன் கூறுகையில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கல்வித்துறையிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அதற்கு ஏற்ப சிகாம்பூட் தமிழ்ப்பள்ளி இதர தமிழ்ப்பள்ளிகளுக்கு முன்னோடியாக மெய் நிகர் கற்றல் கற்பித்தல் வகுப்பறைகளை கொண்டிருப்பது பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.

‘கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே’ இது ஒளவையார் வாக்கு. நமக்கு ஒன்றை தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் அதை தெரிந்தவரிடம் சென்று கெஞ்சிக் கூத்தாடியாவது படிக்க வேண்டும் என்பது பொருள்.

செல்வங்களில் சிறந்த செல்வமான கல்விச் செல்வத்தை குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுக்க வேண்டும். அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெற்றோர் தியாங்களை புரிய வேண்டும்’ என அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, டத்தோ எம்.சரவணன் அப்பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளையும் நற்சான்றிதழ்களையும் எடுத்து வழங்கினார்.