பிகேஎன்எஸ் பயிற்றுநரானார் டத்தோ ராஜகோபால்!

மலேசிய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்றுநரான டத்தோ ராஜகோபால், பிகேஎன்எஸ் கால்பந்து அணியின் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிகேஎன்எஸ் எனப்படும் சிலாங்கூர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரியான நோரைய்டா முகமட் யூசோப் நேற்று டத்தோ ராஜகோபால் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார்.

பிகேஎன்எஸ் அணியின் தலைமை பயிற்றுநராக டத்தோ ராஜபோபால் (வயது 61) 1990ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டுவரை பணியாற்றினார். தொடர்ந்து சிலாங்கூர், கிளந்தான், 19 வயதிற்குட்பட்ட மலேசிய கால்பந்து அணி, ஹரிமாவ் முடா ஏ, 23 வயதிற்குட்பட்ட மலேசிய கால்பந்து அணி, தேசிய கால்பந்து அணிகளின் பயிற்றுநராக அவர் பணியாற்றியுள்ளார்.

மீண்டும் பிகேஎன்எஸ் அணியின் பயிற்றுநராக டத்தோ ராஜகோபால் நியமிக்கப்படுவதால், அடுத்த பருவத்தில் பிகேஎன்எஸ் அதிரடி படைக்குமென பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.