அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மன்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது மன்செஸ்டர் யுனைடெட்!
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

மன்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது மன்செஸ்டர் யுனைடெட்!

நியூயார்க், ஜூலை 21-

உலகளவிய வெற்றியாளர் கிண்ணப் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகின்றது. இந்த போட்டியில் உலகின் தலைசிறந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் இன்று மலேசிய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பரம வைரிகளான மன்செஸ்டர் யுனைடெட் அணியும் மன்செஸ்டர் சிட்டி அணியும் களம் கண்டன.

இதில் இரண்டு அணிகளும் முன்னணி ஆட்டக்காரர்களை களமிறக்கின. ஆட்டம் தொடங்கியது முதல் மன்செஸ்டர் யுனைடெட் அணி, ஆட்டத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இதன் விளைவாக அவ்வணி மன்செஸ்டர் சிட்டியின் தற்காப்புப் பகுதிக்குள் ஊடுருவி தொடர் தாக்குதல்களை முன்னெடுத்தது. ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கான முதல் கோலை ரொமெலு லுக்காக்கூ அடித்தார். குறிப்பாக கோல் காவலரை முந்தி அவர் புகுத்திய கோல் மன்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இந்த கோலினால் மன்செஸ்டர் சிட்டி தொடர் தாக்குதல்களை முன்னெடுக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த 2ஆவது நிமிடத்தில் அதாவது, 38ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கான 2ஆவது கோலை மார்கேஸ் ராஷ்ஃபெர்ட் புகுத்தினார். இதனால் 2 என்ற கோல் எண்ணிக்கையில் மன்செஸ்டர் யுனைடெட் முன்னிலை பெற்றது.

பிற்பாதியில் இரண்டு அணிகளும் கோல் புகுத்த போராடின. இருப்பினும் இரண்டு அணிகளும் பல அற்புதமான வாய்ப்புகளை தவறவிட்டன. இதனால் இறுதியில் 2 என்ற கோல் எண்ணிக்கையில் மன்செஸ்டர் யுனைடெட் வென்றது. இதனிடையே 24ஆம் தேதி நடக்கும் ஆட்டத்தில் ஸ்பெனின் ரியல் மாட்ரிட் அணியை மன்செஸ்டர் யுனைடெட் எதிர்கொள்கின்றது. பின்னர் 27ஆம் தேதி நடக்கும் ஆட்டத்தில் பார்சிலோனாவை மன்செஸ்டர் யுனைடெட் சந்திக்கின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன