அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > கோத்தின்ஹோவை விட்டு கொடுக்க முடியாது 
விளையாட்டு

கோத்தின்ஹோவை விட்டு கொடுக்க முடியாது 

ஹாங் காங், ஜூலை.21

பிரேசிலின் மத்திய திடல் ஆட்டக்காரர் பிலிப்பே கோத்தின்ஹோவை வாங்கும் பார்சிலோனா கிளப்பின் எந்த ஒரு முயற்சிக்கும் லிவர்புல் அடிபணியாது என அந்த கிளப் உறுதியாக அறிவித்துள்ளது. கோத்தின்ஹோவை வாங்க பார்சிலோனா 7 கோடியே 20 லட்சம் பவுன்ட் தொகையை லிவர்புல் கிளப்புக்கு வழங்க முன் வந்துள்ளது.

எனினும் அந்த அழைப்பு தொகையை நிராகரித்துள்ள லிவர்புல் எந்த ஒரு காரணத்துக்காகவும் கோத்தின்ஹோவை விட்டு கொடுக்க முடியாது என உறுதியாக தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் கோத்தின்ஹோ, லிவர்புல் கிளப்புடன் ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இந்த புதிய ஒப்பந்தத்தில் , கோத்தின்ஹோ, தம்மை விடுவித்துக் கொள்ளக் கூடிய எந்த ஓர் அம்சத்தையும் லிவர்புல் நிர்வாகம் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. கடந்த சில ஆண்டுகளாகவே கோத்தின்ஹோவை வாங்க பார்சிலோனா திட்டமிட்டு வந்துள்ளதாக அந்த கிளப்புக்கு நெருக்கமான சில தரப்புகள் தெரிவித்துள்ளன.

கோத்தின்ஹோ, பார்சிலோனா கிளப்புக்கு விளையாடக் கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. பார்சிலோனாவின் முன்னணி நட்சத்திரம் நெய்மாரை வாங்க, பிரான்சின் பாரிஸ் செயின் ஜெர்மைன் முயற்சிகளை மேற்கொண்டுள்ள வேளையில் அந்த கிளப் , தற்போது கோத்தின்ஹோ மீது தனது கவனத்தை திருப்பியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன