அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > உயிருக்குப் போராடும் குழந்தைக்கு உதவுங்கள்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

உயிருக்குப் போராடும் குழந்தைக்கு உதவுங்கள்!

கோலாலம்பூர், ஜூலை 21-

கல்லீரல் செயலிழப்பிற்கு ஆளாகி உயிருக்கு போராடி வரும் பிரிஷாவிற்கு (வயது 3) கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பொதுமக்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டுமென ம.இ.கா. இளைஞர் பிரிவின் தகவல் பிரிவுத் தலைவர் புனிதன் கேட்டுக் கொண்டார். இதே பிரச்னைக்கு இலக்கான பிரிஷாவின் அண்ணன், 2 வயதிலேயே அகால மரணம் அடைந்தார். இதே நிலை இந்த குழந்தைக்கும் வராமல் தடுக்க பொதுமக்கள் முடிந்த அளவு உதவ வேண்டுமென்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.

மருத்துவ வசதிகள் மேம்பாடு கண்டுள்ள நிலையில் பிரிஷாவின் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக இந்த கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி தேவைப்படுகின்றது. இதுவரையில் ம.இ.கா. இளைஞர் பிரிவு பல குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து அதில் வெற்றி கண்டுள்ளது. அந்த வரிசையில் இந்த குழந்தையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கும் பொதுமக்களில் உதவியை நாடியிருப்பதாக புனிதன் கூறினார்.

முன்னதாக மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை பிரிஷாவின் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை குறித்து வெளியிட்ட அதிகாரப்பூர்வ கடிதத்தையும் அவர் செய்தியாளர்களின் பார்வைக்குக் கொண்டு வந்தார்.

பிரிஷாவிற்கு இன்னும் சில வாரங்களில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும் என்பதையும் புனிதன் நினைவுறுத்தினார். பிரிஷாவின் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உதவிக்கரம் நீட்ட எண்ணம் கொண்டவர்கள், CIMB – 7066502307 PRISSHA A/P CHANDRAN, KRISHNAVENI VALU என்ற வங்கிக் கணக்கில் அவர்களது பணத்தை செலுத்தலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன