பெட்டாலிங் ஜெயா, செப். 7
ஓரின புணர்ச்சி வழக்கில் அரசின் சார்பில் வழக்கை நடத்திய தனியார் வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லாவுக்கு வெ. 9.5 மில்லியன் வழங்கப்பட்டது உண்மையென டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
சட்டத் துறை அலுவலகம் அனுப்பியுள்ள சத்தியப் பிரமாணத்தில், அது உண்மையென குறிப்பிடப்பட்டுள்ளதாக அன்வார் சுட்டிக் காட்டினார்.
2013 செப்டம்பர் 13லும் 2014 பிப்ரவரி 17லிலும், வெ. 9.5 மில்லியன் தொகை ஷாபியின் சிஐஎம்பியின் கணக்கில் சேர்ப்பிக்கப்பட்டது. அந்தப் பணம் நஜீப்பின் சொந்தப் பொருளகக் கணக்கிலிருந்து காசோலைகளின் மூலம் ஷாபியின் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளன.
2013 ஜூலையில் தம்முடைய விடுதலைக்கான தீர்ப்புக்கு எதிராக அரசின் மேல்முறையீட்டில், அரசின் சார்பில் வழக்கறிஞர் ஷாபி ஆஜரானதாகவும் அதன் தீர்ப்பு 2015 பிப்ரவரியில் கூட்டரசு நீதிமன்றதில் வெளியிடப்பட்டதாக அன்வார் தெரிவித்தரார்.
இதனிடையே, கடந்த 2017ஆம் ஆண்டு அன்வார் தமது ஓரின புணர்ச்சி வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும், நஜீப்பிற்கும் ஷாபியிக்கும் இடையே 2013 ஆகஸ்டிலிருந்து 2014 மார்ச் வரை நிகழ்ந்த பண பரிவர்த்தனையை வெளியிட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
வெ. 9.5 மில்லியன் பணம் நஜீப்பின் தனிப்பட்ட பொருளகக் கணக்கிலிருந்து ஷாபியின் கணக்கில் செலுத்தப்பட்ட தகவல் கிடைத்த பின்னர், அன்வார் அந்த வழக்கைத் தாக்கல் செய்தார்.
நாட்டில் நீதி முறைமை சரியான வழியில் கடைப்பிடிக்க வெண்டுமென்ற நோக்கத்தில்தான் தாம் அந்த வழக்கைத் தாக்கல் செய்ததாகவும் புதிய மலேசியாவில் சட்ட முறைப்படி ஆட்சி மற்றும் நாட்டின் நீதி வழுவாமல் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


