Homeமலேசியாபலாக்கோங்-ஸ்ரீ செத்தியா சட்டமன்ற இடைத்தேர்தல்: நம்பிக்கை கூட்டணி வெற்றி

பலாக்கோங்-ஸ்ரீ செத்தியா சட்டமன்ற இடைத்தேர்தல்: நம்பிக்கை கூட்டணி வெற்றி

கோலாலம்பூர், செப். 8-

சிலாங்கூர் மாநிலத்தில் பலாக்கோங் மற்றும் ஸ்ரீ செத்தியா சட்டமன்றத் தொகுதிகளுக்கான நடைபெற்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றது.

ஸ்ரீ செத்தியா தொகுதியில் போட்டியிட்ட பக்காத்தான் ஹராப்பானின் வேட்பாளரான அலிமி அபு பாக்கார் 13,725 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ முடிவுகள் மூலம் தெரிய வருகிறது.

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற முன்னாள் உறுப்பினருமான அலிமியை எதிர்த்து போட்டியிட்ட பாஸ் வேட்பாளரான டாக்டர் அலிமா அலி 9689 வாக்குகளை மட்டும் பெற்று தோல்வி கண்டார். கடந்த 2008ஆம்  ஆண்டு தொடங்கி ஸ்ரீ செத்தியா சட்டமன்ற தொகுதியை பக்காத்தான் ஹராப்பான் தற்காத்து வருகிறது.

இந்நிலையில், பலாக்கோங் சட்டமன்றத் தொகுதியை பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் தற்காத்துக் கொண்டது.  இத்தொகுதியில் போட்டியிட்ட பக்காத்தான் ஹராப்பானின் வேட்பாளரான ஜசெகவின் வோங் சியூவ் கீ 22,508 வாக்குகளைப் பெற்று வெற்றி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய முன்னணி மசீச வேட்பாளர் தான் சீ தியொங் 3,975 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

spot_img

latest articles

explore more