spot_img
14.9 C
London
spot_img
Home மலேசியா கல்வி செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது சரித்திர நிகழ்வாகும் -கணபதி ராவ்

செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது சரித்திர நிகழ்வாகும் -கணபதி ராவ்

0
352

செமினி, பிப் 27-

செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 5 ஏக்கர் நிலத்தை சிலாங்கூர் மாநில அரசு வழங்கியிருப்பது சரித்திர நிகழ்வு என புகழாரம் சூட்டிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ், நடவடிக்கையானது தொடரும் என்ற நம்பிக்கையையும் வழங்கினார்.

கல்வித் துறையின் துணை அமைச்சர் தியோ நி சின், சைம் டார்பி நிறுவனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றி கண்டதன் மூலம் செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செமினி தோட்டத்தில் வாழ்ந்த 34 முன்னாள் தோட்ட பாட்டாளிகளுக்கு வீடுகள் கோயிலுக்கு 31,000 சதுர அடி நிலம் தேவாலயத்திற்கு 20,000 சதுர அடி நிலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவலையும் கணபதிராவ் உறுதிப்படுத்தினார்.

செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி உட்பட  சிலாங்கூரில் உள்ள பல தமிழ்ப்பள்ளிகளில் உள்ளே செல்ல முன்பு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என குறிப்பிட்ட அவர் தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் பல தமிழ்ப்பள்ளிகளில் நுழைய தடை விதிக்கப்பட்டது என்பதை வெளிப்படையாகக் கூறினார்.

ஆனால் இன்று ஆட்சிமாற்றத்தின் கீழ் மத்திய அரசாங்கம் நம்பிக்கை கூட்டணி கைவசம் இருப்பதால் இங்குள்ள உள்ள அனைத்து தமிழர்களுக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில் என்னால் செல்ல முடிகிறது என்றார் அவர்.

சிலாங்கூரில் 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் மாநிலத்தில் உள்ள 97 தமிழ்ப்பள்ளிகளுக்கு மிகப்பெரிய மானியங்கள் வழங்கப்பட்டன. 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை தலா 40 லட்சம் வெள்ளி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

நீர் இயற்கை வள சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்தபோது, சிலாங்கூரில் உள்ள பல தமிழ்ப் பள்ளிகளுக்கு நிலங்களை காப்பாற்றி இருக்கிறார் கணபதிராவ் குறிப்பிட்டார்.

செமினி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் முகமது அய்மானை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ள வி கணபதிராவ் செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு புதன்கிழமை வருகை புரிந்தார்.

தமிழ்ப்பள்ளிக்கு 5 ஏக்கர் நிலத்தை உறுதி செய்த சிலாங்கூர் அரசாங்கத்திற்கும் கணபதிராவ் ஆகியோருக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெயபாலன் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

சேவியர் ஜெயக்குமார் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்தபோது செமினி தமிழ் பள்ளிக்கு 3 ஏக்கர் நிலம் பெற்று தந்து உதவி புரிந்தார். இப்போது கணபதிராவ் மேலும் இரண்டு ஏக்கர் நிலத்தை பெற்றுத்தந்து மொத்தம் ஐந்து ஏக்கர் நிலத்தை தமிழ்ப்பள்ளிக்கு உறுதி செய்திருக்கிறார் என ஜெயபாலன் மகிழ்ச்சி தெரிவித்தார்.