Homeஅரசியல்பாஸ் கட்சி குறித்து தாம் கூறிய அனைத்தும் உண்மையே -துன்  டாக்டர்...

பாஸ் கட்சி குறித்து தாம் கூறிய அனைத்தும் உண்மையே -துன்  டாக்டர் மகாதீர் 

கோலாலம்பூர், மார்ச் 3-

சரவா ரிப்போர்ட் இணைய தள பதிவேட்டாளர்  ரீயுகஸ்டல் பிரவுன் 14 லட்சம் வெள்ளி வழங்கியது உட்பட பாஸ் கட்சி தொடர்பாக தாம் கூறிய அனைத்து தகவல்களும் உண்மை என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் ஹாடி அவாங் தம்மை சந்தித்த போது ஆதரவு வழங்குவதாக  கூறியிருந்தார். ஆனால் செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை  என டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

ஹாடி அவாங் தம்மை சந்தித்ததோடு அவர் அக்கட்சியின்  செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணிக்கு  ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தர். மேலும் அந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்றும் ஹாடி அவாங்  கூறியிருந்ததாக டாக்டர் மகாதீர் இன்று தெரிவித்தார்.

ஆனால்  வேட்புமனுத்தாக்கல் தினத்தன்று தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக பாஸ் தலைவர் அறிவித்தது தமக்கு வியப்பாக இருந்ததாக டாக்டர் மகாதீர்  கூறினார்.

பிரவுன்னுக்கு பாஸ் கட்சி வழங்கிய பணம் தொடர்பாக கூறப்பட்ட  குற்றச்சாட்டின் காரணமாக  செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி தோல்வி அடைந்ததா என்று வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது டாக்டர் மகாதீர் இதனை தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more