கோலாலம்பூர், மார்ச் 12
கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினராக ரம்லி முகமது நோர் இன்று மக்களவையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
தேசிய முன்னணி வேட்பாளரான ரம்லி கடந்த ஜனவரி 26ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நாட்டின் முதலாவது பூர்வகுடி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார்.
கறுப்பு நிற மலாய் பாரம்பரிய உடையணிந்திருந்த ரம்லி மக்களவை சபாநாயகர் டத்தோ முகமது அரிஃப் முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
நாடாளுமன்றத்திற்குத் தேர்வு பெற்ற முதலாவது பூர்வகுடி வேட்பாளர் என்ற வரலாற்றைப் படைத்த ரம்லியை முகமது அரிஃப் பாராட்டினார்.
“நீங்கள் உங்களின் கடமைகளை சீரிய முறையில் ஆற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார் முகமது அரிஃப்.
அந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் எம். மனோகரனை எதிர்த்துப் போட்டியிட்ட ரம்லி 3,238 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.


