Homeகலை உலகம்ஜூலி மீது ஏன் இந்த கோபம்! இது ஒரு பெண்ணின் மன ஓலம்!

ஜூலி மீது ஏன் இந்த கோபம்! இது ஒரு பெண்ணின் மன ஓலம்!

( சக்தி )

ஜல்லிக்கட்டு மூலம் தமிழகத்தின் வீரத்தமிழச்சியாக பிக்பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளராக உள்ளே சென்ற ஜூலி, பின்னர் எரிச்சல் சிரிப்புகுரியர், அதிகம் பேசுபவர், பொய் சொல்பவர், பரணிக்கு உண்மையில்லாதவர், ஓவியாக்கு துரோகம் செய்தவர், காயத்திரியின் கூஜா தூக்கி, இப்படி பல்வேறு அவப்பெயர்களுடன் பிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் வெளியேற்றப்பட்டர். ஆனால் மக்களின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்காமல் மீண்டும் ஜூலியை பிக்பாஸ் வீட்டில் அனுமதித்த விஜய் டிவி நிர்வாகிகளை பார்வையாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் ஆர்த்தி மற்றும் ஜூலி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். ஆனால் இருவரும் ஒருவாரம் விருந்தினர்களாக மட்டுமே தங்கியிருப்பார்கள் என்றும் இருவரும் அடுத்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட பின்னர்தான் ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு அடைந்ததோடு மகிழ்ச்சியும் அடைந்தனர். இந்த நிலையில் வீட்டிற்குள் வந்தவுடன் ஜூலி தனது வழக்கமான பொய்யை ஆரம்பித்துவிட்டார். இவரெல்லாம் இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருந்த மாட்டார் என்று டுவிட்டரில் கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.

இதைப் பார்க்கும் போது ஒன்று மட்டும்தான் தெரிகிறது, பொது மக்களின் பார்வையில் இங்கு மாற்றமில்லையோ என்று தோன்றுகிறது. உண்மையில் ஜூலியிடம் ஒரு மாற்றம் தெரிகிறது. ஒருவர் தவறு செய்துவிட்டால் பின்னர் அவர் திருந்தவே மாட்டார் என்று சொல்லமுடியாது. அதிலும் உலகமே பார்க்கும் ஒரு நிகழ்ச்சியின் மூலம் இத்தனை அவமானங்களுக்குப் பிறகும் ஜூலி மாறவில்லை என்று அவ்வளவு எளிதில் நாம் கணித்துவிட முடியாது. ஜூலின் கதை புலிவருது என்பது போல் ஆகிவிட்டதால் இன்று இந்த நிலை அந்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது.

உள்ளே வந்த ஜூலிக்கு சிநேகன் மேல் மனவருத்தம் இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும், அதனை எப்படி, எப்போது வெளிப்படுத்த வேண்டும் எனபதில் ஜூலி தெளிவாகவே இருக்கின்றார். காஜலிடம் பேசும்போது அவர் வாயில் இருந்த ஒரு வார்த்தை என்னுடைய கேரக்டரை மாற்ற முடியாது ஆனால் என்னுடைய ஹபிட்டை மாற்றிக்கொள்வேன்”.

சத்தமாக சிரிப்பது, அதிகம் பேசுவது, யாரும் தன்னை ஏதும் சொல்லிவிடக்கூடாது, இதுவே அவர் கேரக்டராக இருக்கலாம். தவறு செய்துள்ளேன். அதே சமயம் நிறையக் கற்றுக்கொண்டும் வந்திருக்கின்றேன் என்று கூறும்போதே அவர் பேச்சில் முதிர்ச்சி தெருகிறது. பிக்பாஸ் வீட்டின் கண்ணாடியாக இருக்கும் கமல் சொல்வது போல் இங்கு அவருக்கு பரிந்து பேசவில்லை. ஆனால் சில விசயங்களை எதிர்த்து பேசாமல் இருப்பதும் தவறுதான்.

செயல்களால் தவறு செய்த பெண்ணை உலகம் நிறைய வார்த்தைகளால் பங்கம் செய்துவிட்டது. நம் வீட்டில், நம்மைச் சுற்றி இருப்பவரை, வேலை செய்யும் இடத்தில் இருக்கும் மனிதர்களை, ஏன் நம்மையே நாம் ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால், பிறந்தநாள் முதல் பொய் சொன்னது இல்லையா? துரோகம் நடந்தது இல்லையா? அவரவருக்கு ஏற்றார்போல நடித்தது இல்லையா? புறணி பேசியது இல்லையா? திரித்து கூறியது இல்லையா? இப்படி இதை விட எத்தனையோ செயல்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

உண்மையில் சொன்னால், பிக்பாஸ் வீட்டில் பரணி மற்றும் ஓவியாவைத் தவிர ஜூலி மற்றவர்களுக்கு உண்மையாகதான் இருந்திருக்கின்றார். அவர்களின் அன்பைப் பெற வேண்டியே தவறுகளும் செய்திருக்கின்றாள். அவர்கள் எத்தகைய குணம் கொண்டவர்கள் என்பதை வெளியில் சென்ற ஜூலிக்கு உண்மை புரிந்திருக்கும். அவளின் குணத்தை அறிந்து கொண்ட மனிதர்களில் அங்கு கணேஷ் மட்டுமே உண்மையாக இருந்ததை நாம் பார்த்துள்ளோம்.

எப்போதுமே, ஒரு பிரச்னைக்கு தீர்வு காணும்போது, ஒன்று அந்த பிரச்னைக்குரிய நபரின் இடத்திலிருந்து பார்க்க வேண்டும், மற்றொன்று அந்த பிரச்னையை வெளியே நின்று எது சரி தவறு சென்று யோசிக்க வேண்டும். அதற்கு பதிலாக நாமே அதற்குள் மாட்டிக்கொள்ளக்கூடாது. இங்கு நிறைய பேர் இன்னும் பிக்பாஸ் வீட்டுக்குள் மாட்டிக்கொண்டு இருக்கின்றோம்.

ஆனால் அந்த வீட்டிற்குள் இருந்து வெளியேறியவர்கள் இது அல்ல வாழ்க்கை. பாடம் கற்கவே வந்தோம். வீட்டுக்கு வெளியேதான் வாழ்வே இருக்கிறது என்பதை உணர்ந்து இருக்கின்றார்கள். நாமும் உணர்ந்து கொள்வோம். உண்மை புரிந்த பரணியும் ஓவியாவுமே ஜூலியின் மன்னிப்பை ஏற்று உள்வாகி நட்பாகி விட்ட பின்னர். இதில் அவரை மன்னிக்க நாம் யார்? அந்த பெண்ணும் வாழட்டும், ஓவியாவின் எண்ணம்போல.

spot_img

latest articles

explore more