Homeவர்த்தகம்800 பேருக்கு பிரிக்ஃபீல்ட்ஸ் ராஜி பட்டு மாளிகையின் தீபாவளி அன்பளிப்பு - டத்தோ ஶ்ரீ...

800 பேருக்கு பிரிக்ஃபீல்ட்ஸ் ராஜி பட்டு மாளிகையின் தீபாவளி அன்பளிப்பு – டத்தோ ஶ்ரீ சரவணன் பாராட்டு

பிரிக்ஃபீல்ட்ஸ், நவம்பர் 14:-

இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு பிரிக்ஃபீல்ட்ஸ் ராஜி பட்டு மாளிகை நிறுவனத்தார் சுமார் 800 பேருக்கு தீபாவளி அன்பளிப்பை வழங்கியுள்ளனர். இதை முன்னிட்டு நேற்று பிரிக்ஃபீல்ட்ஸ் ராஜி பட்டு மாளிகையின் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சரும் ம.இ.கவின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஶ்ரீ சரவணன் தலைமையேற்று இராஜி பட்டு மாளிகைநிறுவனத்தாரைப் பாராட்டியதோடு மட்டும் இல்லாமல் இறுதி நேர “ஷாப்பிங்” ஆக தீபாவளி ஆடைகளையும் வாங்கிச் சென்றார். இவர்களிடன் ராஜி டெக்ஸ்டாலின் நிர்வாக குழுவின் உறுப்பினர்களான டத்தோ கண்டேசன், டத்தோ முகம்மாட் அலி பின் மஸ்தான், டத்தோ கலை, நவனீத் பிள்ளை P.J.K., மகேஷ் லட்சுமணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நேற்றைய நிகழ்ச்சிக்கு முன்னதாகவே ராஜி பட்டு மாளீகை நிறுவனத்தார் ஜெஞ்சாரோம் மகா ஆதரவற்றோர் இல்லம், ஜெஞ்சாரோம் ஆதரவற்றோர் இல்லம், ரவாங்கில் உள்ள ஆதரவற்றோர் இல்லம் ஆகிய இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளவர்களுக்கும் தீபாவளி ஆடைகள், உணவுப் பொருட்கள், அடிப்படைத் தேவைக்கானப் பொருட்கள், உதவித் தொகை என்னப் பல தரப்பட்ட வகைகளில் தீபாவளி அன்பளிப்புகளை வழங்கியதாக டத்தோ கண்டேசன் கூறினார்.

மேலும், தமிழன் உதவும் கரங்கள் தொண்டூழியர்களின் ஒத்துழைப்போடும் சன்வே மெந்தாரி பகுதியில் வாழும் வசதி குறைந்த இந்தியர்களுக்கும் இந்த அன்பளிப்புகளை வழங்கியிருந்ததாக ராஜி பட்டு மாளிகை நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மகேஷ் லட்சுமணன் தெரிவித்தார்.

மேலும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் பெரும்பான்மை நடவடிக்கைகள் இயங்கலையில் நடந்தேறி வரும் வேளையில், சுமார் 500 பேருக்கு ஆன்லைன் வழி தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டதாக டத்தோ கலை குறிப்பிட்டார்.

கோவிட்-19 தொற்றால் நம் நாட்டில் பலர் வருமானம் பாதிக்கப்படிருந்தனர். அதிலும் குறிப்பாக நமது இந்தியர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தச் சூழலில் தீபாவளி பண்டிகையும் வரவே, அதைச் சிறப்பாகக் கொண்டாட பலராலும் முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனை நன்கு உணர்ந்து கொண்ட ராஜி பட்டு மாளிகை நிறுவனத்தார், பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்குத் தங்களால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் எனும் நோக்கில் இந்த முன்னெடுப்பு ஆரம்பிக்கப்பட்டதாக நவனீத் பிள்ளை P.J.K. தெரிவித்தார்.

சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி மெல்ல மெல்ல 800 பேரை எட்டும் எனத் தாம் பெரிதும் எதிர்ப்பார்க்க வில்லை என்று குறிப்பிட்ட டத்தோ முகம்மட் அலி, அடுத்தாண்டு தீபாவளிக்கு சுமார் 3,000 இந்தியர்களுக்காவது இது போன்ற தீபாவளி பண்டிகை அன்பளிப்பை வழங்க எண்ணாம் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த முன்னெடுப்பைத் தொடங்கிய இராஜி பட்டு மாளிகை நிறுவனத்தாரின் முயற்சியை தாப்பா நாடாளுமன்ற உறிப்பினருமான டத்தோ ஶ்ரீ சரவணன் வெகுவாகப் பாராட்டியதோடு இல்லாமல் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வசதி குறைந்த இந்தியர்களுக்கு தீபாவளி அன்பளிப்பையும் வழங்கினார். மேலும், இது போன்று இந்திய மக்களுக்கு உதவும் முன்னெடுப்பு பாரட்டுக்குரியது மட்டும் இல்லாமல் பலராலும் பின்பற்ற வேண்டிய ஒன்று எனவும் டத்தோ ஶ்ரீ சரவணன் கூறினார்.

spot_img

latest articles

explore more