கோலாலம்பூர் | 7/7/2021 :-
கோவிட்-19 காலத்தில் பிரச்சனைகளைச் சந்திக்கும் மலேசிய மக்களுக்கு உதவுவதற்கும் உதவி கோருவதற்கும் இணையத்தளம் ஒன்று அறிமுகம் கண்டுள்ளது.
Terato Tech எனும் தகவல் தொழ்ல்நுட்ப நிறுவனம் உருவாக்கிய அந்த இணையத்தளம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நிறைவு கண்டு இவ்வாரம் திங்கட்கிழமை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
Terato Tech நிறுவனத்தின் தோற்றுநர் ரேஸா ரஸாலி இது குறித்து தெரிவிக்கயில், இந்த இணையத்தளம் உருவாக்க ஒரே நாள் எடுத்துக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
பெருந்தொற்றுக் காலத்தில் பாதிப்படைந்த மலேசியர்க்களுக்கு உதவ வேண்டும் எனும் நோக்கத்தில் தமது ஊழியர்களில் ஒரு குழுவினர் முன்வைத்த சிந்தனைக்கு உருவம் கொடுக்கும் முயற்சியாக இது அமைந்துள்ளது.
இந்த இணையத்தளத்தைப் பயன்படுத்த அதன் இணைப்புக்குச் சென்று பெயர், வசிப்பிடம் ஆக்யவற்றைக் குறிப்பிட்டு உதவி கோரவோ அல்லது உதவி செய்யவோ அதற்கான தேர்வை சொடுக்கலாம்.
டுவிட்டர் சமூக ஊடகத்தில் இந்த KITAJAGA.COM இணையத்தளத்திற்கான வரவேற்பு அமோகமாக இருந்தது.
இந்த இணையத் தளம் வழி உதவி செய்வதற்கும் கோருவதற்கும் மிக எளிதாக இருக்கும். எனவே, இதனை மக்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரேஸா ரஸாலி கூறினார்.


