கோலாலம்பூர் | 7/7/2021 :-
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் கட்சிகளோ நேர்முகச் சந்திப்பு நடத்துவதாக தமது தரப்புக்குத் தகவல் கிடைத்தால், உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கபப்டும் என மலேசியக் காவல்துறை தலைர் அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார்.
எனவே, தற்போதையச் சூழ்நிலையில் அரசியல்வாதிகளும் அரசியக் கல்டிகளும் அவாறு செய்ய வேண்டாம் என அவர் நினைவுப்படுத்தினார்.
தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் எஸ்.ஓ.பி.க்கள் அனைத்து அரசியல் கட்சிகளும் நன்கு அறிந்திருப்பார்கள் எனத் தாம் நம்புவதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், தமது தரப்புக்கு தகவலோ அல்லது புகாரோ கிடைக்கப்பெற்றால், உடனடியாக விசாரணை செய்ய விசாரணை அறிக்கை திறக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த 1/6/2021 முதல் நாட்டில் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டை அரசு நடைமுறைப்படுத்துகிறது.
அதன்படி, அரசாங்கத்தி அதிகாரப்பூர்வ நடவடிக்கை உட்பட அனைத்து நேர்முக நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3/7/2021 முதல் சிலாங்கூரிலும் கோலாலம்பூரிலும் பல பகுதிகளில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 14 நாட்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், ஜாலான் பெல்லாமியில் ஒரு வீட்டிலும் கோலாலம்பூரில் உள்ள தற்காப்பு அமைச்சின் கட்டடமான விஸ்மா பெர்வீராவிலும் நேர்முகச் சந்திப்புக் கூட்டம் ஒன்று அம்னோ அரசியல்வாதிகளால் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
தேசியக் கூட்டணி மீதான ஆதரவுக்கு எதிரானத் திட்டமிடல் குறித்து அச்சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டதாக தகவல் பரவி வந்தது.