Homeஅரசியல்நம்பிக்கைக் கூட்டணி : தேர்தலுக்கு இது நேரமல்ல !

நம்பிக்கைக் கூட்டணி : தேர்தலுக்கு இது நேரமல்ல !

கோலாலம்பூர் | 8/7/2021 :-

கோவிட்-19 பெருந்தொற்று அதிகரித்துள்ள நிலையிலும், பொதுச் சுகாதார வசதிகள் தற்பொழுது நெரூகடியைச் சந்துத்துள்ள நிலையிலும் இடைத்தேர்தல், மாநிலத் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகியவற்றை நடத்த இது சரியான நேரமாக இருக்காது என நம்பிக்கைக் கூட்டணி தெரிவித்துள்ளது.

நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றம் இன்று வெளியிட்ட அறிக்கையில், மக்கள் தற்பொழுது எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளையும் கோவிட்-19 பெருந்தொற்றையும் கையாள்வதில் நம்பிக்கைக் கூட்டணி அதிக கவனம் செலுத்தும். மேலும் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை விரைவுப்படுத்தும் முயற்சியிலும் இறங்கும் என அது தெரிவித்தது.

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் மீட்சி பெறச் செய்யும் கொள்கைகளையும் நம்பிக்கைக் கூட்டணி பரிந்துரைக்கும்.

மக்களின் உயிரைக் காப்பாற்றும் நடவடிக்கைகளிலும் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத்தையும் மீட்சி பெற செய்வதையே முன்னிலைப் படுத்த வேண்டுமே தவிர அரசியல் நன்மைக்காக அல்ல.

அந்தக் கூட்டு அறிக்கையில் பிகேஆர் தலைவர் அன்வார் இபுராகிம், அமனா தலைவர் முகம்மட் சாபு, ஜசெகவின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

spot_img

latest articles

explore more