ஷா ஆலாம் | 13/7/2021 :-
இங்குள்ள Ideal Convention Centre (IDCC) மாநாட்டு மையத்தில் செயல்பட்டு வந்த கோவிட்-19 தடுப்பூசி மையத்தின் ஊழியர்களுக்கு கோவிட்-19 பரவல் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து இன்று ஒரு நாள் (13/7/2021) முடப்படுகிறது.
நேற்றூ இரவு நடத்தப்பட்ட கோவிட்-19 பரிசோதனையின்படி, தொற்று நீக்கள் தூய்மைப்படுத்தும் பணிக்காக அது மூடப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த 29/6/2021 முதல் இம்மாதம் 12/7/2021 வரையில் இம்மையத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சுய மதிப்பீட்டையோ அல்லது பரிசோதனையையோ மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வழங்கப்பட்ட நேர்முகச் சந்திப்புகள் அனைத்தும் விரைவில் வேறொரு நாளுக்கு மாற்றம் காணும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


