தீபாவளித் திருநாளை முன்னிட்டு, YB துவான் பாப்பாராயுடு வீரமண் அனைத்து இந்து மக்களுக்கும் தனது இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தீபாவளி என்பது தீமையை அகற்றி நன்மையை நிலைநாட்டும் நன்னாளாகும். இத்திருநாள் ஒவ்வொருவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதுடன், குடும்ப உறவுகளையும் சமூகப் பிணைப்புகளையும் வலுப்படுத்தும் சிறப்பைக் கொண்டுள்ளது.
இந்த இனிய திருநாளில் அனைத்து மக்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு நிறைந்திருக்க வேண்டும். மலேசியாவின் பல்லின மக்களிடையே ஒற்றுமையும் நல்லிணக்கமும் தொடர்ந்து மேலோங்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.
மேலும், அனைவரும் சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்து அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டு, ஒற்றுமையுடன் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


