Homeசிறப்புச் செய்திகள்ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்த தீபாவளியாக அமையட்டும்! – YB பிரகாஷ் சம்புநாதன் தீபாவளி வாழ்த்து

ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்த தீபாவளியாக அமையட்டும்! – YB பிரகாஷ் சம்புநாதன் தீபாவளி வாழ்த்து

தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினரும், கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான YB பிரகாஷ் சம்புநாதன் தனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தீபாவளி என்பது இருளை அகற்றி ஒளியைப் பரப்பும் நன்னாளாக மட்டுமின்றி, அன்பு, ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் திருநாளாகும்.

இந்நன்னாளில் அனைத்து குடும்பங்களிலும் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு நிறைந்திருக்க வேண்டும். பல்வேறு இன, சமய மக்களிடையே நல்லிணக்கமும் ஒற்றுமையும் மேலும் வலுப்பெற வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.

மேலும், அனைவரும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியாகத் தீபாவளியைக் கொண்டாடி, அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

latest articles

explore more